உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / அரியலூரில் ஐ.ஜே.கே., ஆலோசனைக் கூட்டம்

அரியலூரில் ஐ.ஜே.கே., ஆலோசனைக் கூட்டம்

அரியலூர்: அரியலூரில் இந்திய ஜனநாயக கட்சியின் (ஐ.ஜே.கே.,) ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் கோவை தம்பி பங்கேற்றார்.அரியலூர் ஜி.ஆர். திருமண மண்டபத்தில் நடந்த இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட பொருளாளர் அழகமுத்து, கொள்கை பரப்பு செயலாளர் சின்னப்பன், பார்க்கவகுல சங்க மாவட்ட தலைவர் மகாதேவன், பாரி நற்பணி மன்ற மாநில துணை பொதுசெயலாளர் கணேசன், மாவட்ட பாரி நற்பணி மன்ற செயலாளர் நெப்போலியன், செயலாளர் அழகுதுரை முன்னிலை வகித்தனர். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகு சங்கர் வரவேற்றார். வரும் ஆகஸ்டு 24ம் தேதி பாரி வேந்தரின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுவது, கட்சியின் வளர்ச்சிக்காக ஆங்காங்கு கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்துவது, ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில், கட்சி வளர்ச்சிக்கென புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கட்சி வளர்ச்சி நிதி உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் கோவை தம்பி, மாநில பொதுசெயலாளர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை, கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கரிடம், மாநில பொதுசெயலாளர் ஜெயசீலன் வழங்கினார். கூட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவசங்கரன், திருச்சி மாவட்ட தலைவர் தங்கவேல், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் மாலதி, பச்சையம்மாள், யோகா கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !