உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / உலக சதுரங்க போட்டியில் தங்கம் அரியலுார் சிறுமி அபார சாதனை

உலக சதுரங்க போட்டியில் தங்கம் அரியலுார் சிறுமி அபார சாதனை

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தை சேர்ந்த சரவணன் - -அன்புரோஜா தம்பதி மகள் சர்வாணிகா, 8. அல்பேனியா நாட்டில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் நடைபெற்ற உலக சதுரங்க சம்மேளனம் நடத்திய செஸ் போட்டியில், சர்வாணிகா பங்கேற்றார்.இதில், ரேபிட் பிரிவில் தங்கமும், பிளிட்ஸ் பிரிவில் வெள்ளியும் பெற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.ஏற்கனவே காமன்வெல்த் போட்டி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், தேசிய, மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.சர்வாணிகா கூறியதாவது: ஆறு வயதில் இருந்தே செஸ் போட்டியில் ஆர்வமாக இருந்தேன். பெற்றோர், பயிற்சியாளர், நண்பர்கள் என அனைவரும் ஊக்கப்படுத்தினர். இதனால் என்னால் சாதிக்க முடிந்தது. உலக அளவில் விளையாடும் போது, தங்கம் வென்றால் மட்டுமே அந்த நாட்டின் தேசிய கீதம் ஒளிபரப்பப்படும். கடந்த முறை நான் வெள்ளி பதக்கம் வாங்கியபோது, நம் நாட்டு தேசிய கீதம் ஒளிபரப்பப்படவில்லை. இது எனக்கு வேதனையாக இருந்தது.இந்த முறை கண்டிப்பாக நம் நாட்டு தேசிய கீதம் ஒளிபரப்பப்பட வேண்டும். இதற்காக, கடுமையாக உழைத்து வெற்றி பெற எண்ணி போட்டியில் பங்கேற்றேன். வெற்றியும் பெற்று நாட்டிற்கு பெருமை தேடி தந்துள்ளேன்.அரியலுார் கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற சர்வாணிகாவிற்கு, ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ