உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / சேலை கழுத்தில் இறுகியதில் ஊஞ்சல் ஆடிய சிறுவன் பலி 

சேலை கழுத்தில் இறுகியதில் ஊஞ்சல் ஆடிய சிறுவன் பலி 

அரியலுார்: -உடையார்பாளையம் அருகே ஊஞ்சல் ஆடிய போது சேலை கழுத்தில் இறுகி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.அரியலுார் மாவட்டம், இடையாரைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் எபிசாமுவேல், 12; ஏழா-ம் வகுப்பு படித்தார். இவர், அருகில் உள்ள முந்திரி தோட்டத்தில் நேற்று, சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, கழுத்தில் சேலை இறுக்கி, எபிசாமுவேல் மயங்கினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, உடையார்பாளையத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். உடையார்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை