உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / பொதுவாக மரண தண்டனை கூடவே கூடாது: திருமாவளவன்

பொதுவாக மரண தண்டனை கூடவே கூடாது: திருமாவளவன்

பெரம்பலூர்: பொதுவாக மரணத் தண்டனை கூடவே கூடாது என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறினார்.தந்தை தொல்காப்பியன் நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த அங்கனூரிலுள்ள அவரது நினைவிடத்தில் திருமாவளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 3 கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி என கல்வியை நடைமுறைப்படுத்தியவர் காமராஜர். இதனால் தான் தமிழகம் கல்வித் தரத்தில் உயர்ந்துள்ளது. வட இந்திய மாநிலங்களில் இருந்தும், தமிழகத்துக்கு கல்வி கற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு காமராஜரின் பங்களிப்பு மகத்தானது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், நேரடியாக சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி என சொல்லக்கூடிய நிலையில் என்கவுன்டர் நடந்துள்ளது. பொதுவாக என்கவுன்டர், மரண தண்டனை கூடவே கூடாது என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையாகும்.சட்டபூர்வமாக விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் ஒருவருக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு பதிலாக ஆயுள் தண்டனையாக வழங்கலாம். தமிழகத்துக்கான உரிய நீரை திறந்து விட வேண்டும் என இண்டியா கூட்டணி சார்பில் கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் வலியுறுத்துகிறோம். காவிரி ஒழுங்காற்று குழு என்ன ஆணையிட்டுள்ளதோ, அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கர்நாடகா அரசுக்கு உள்ளது. காவிரி பிரச்னை என்பது தமிழக அரசுக்கும் கர்நாடகா அரசுக்கும் இடையிலான மாநில பிரச்சனை என கருதி மத்திய அரசு அமைதி காக்க கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீட் தேர்வு விலக்கு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக இண்டியா கூட்டணி கட்சி முதல்வர்களுக்கு கடிதம் எழுதி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி பிரச்னையில் மத்திய அரசு வேடிக்கை பார்த்தால் உடனடியாக தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

skv srinivasankrishnaveni
ஆக 08, 2024 09:36

குடியே கதின்னு இருக்கும்வரை மக்கள் பரிதாபமான ARPUTHANGKALE


S.Murali
ஆக 03, 2024 12:24

தி மு க வின் அடியாட்கள்


Ramesh Sargam
ஜூலை 22, 2024 18:00

தப்பிக்க இப்படி பேசுகிறார்...!


THERESHM P.M.PERUMAL
ஜூலை 17, 2024 13:16

மரணத்தாண்டனை கொடுக்காமல் இருந்தால்தான் தைரியமாக தவறு பண்ண தூண்டும் தாங்கள் கட்சியும் நடத்த முடியும் அப்படி தானே திருமா சார்


s sambath kumar
ஜூலை 16, 2024 15:07

கரெக்ட்தான். அதிகமாக மரண தண்டனை பெறுவது கூலிப்படை கோஷ்டிகள்.


Vivekanandan Mahalingam
ஜூலை 16, 2024 10:35

மரண தண்டனை தேவையில்லை - தமிழக ரவுடிகள் அதற்க்கு முன்பே வெட்டி விடுவார்கள் என்று சொல்கிறார்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 16, 2024 09:44

வேறு என்ன தண்டனை கொடுக்கலாம் தலைவரே? ஏற்கனவே குற்றங்கள் குறைந்தபாடில்லை. பேசாமல் தண்டனையே கிடையாது என்று கூறிவிடலாம். உங்கலுக்கு கொண்டாட்டமாக போகும்.


Naga Subramanian
ஜூலை 16, 2024 09:26

மரண தண்டனையை அரசு கொடுத்தால் தவறு என்கிறார்


Swaminathan L
ஜூலை 16, 2024 09:13

இந்தியாவில் பொதுவாக மரண தண்டனை இல்லையே. அரிதினும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை என்பது உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு ஆகிற்றே. அதையும் கடந்து மேல் முறையீடு, ஜனாதிபதியிடம் கருணை மனு என்று இருக்கிறதே.


Swaminathan L
ஜூலை 16, 2024 09:11

தமிழகத்திற்கும் தர வேண்டிய நீரை கொடுக்க முடியாது என்று சொல்லும் காங்கிரஸ் கட்சி ஆட்சியாளர்களை நேரடியாக வலியுறுத்தி நீரைப் பெற முடியாத நிலையில் இதற்கு கூட்டணி என்று எதற்காக பொய் பெயர்? மத்திய அரசு எப்படி நேரடியாகத் தலையிட, கர்நாடகத்தை வற்புறுத்த முடியும்? அப்போது மாநில உரிமைகளை அது பறிக்க முயல்வதாக ஆகாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை