மேலும் செய்திகள்
கந்து வட்டி: ஆசிரியை தற்கொலை
12-Sep-2025
பஸ் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு
03-Sep-2025
அரியலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
31-Aug-2025
பெரம்பலுார்:அரியலுார் அருகே மின்சாரம் பாய்ந்து மின் பணியாளர் சம்பவ இடத்திலேயே பலியானார். அரியலுார் மாவட்டம், கல்லாத்துாரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 40, ஜெயங்கொண்டம் மின்வாரிய அலுவலக கேங்மேன். இவர், நேற்று முன்தினம் இரவு உட்கோட்டை கிராமத்திலுள்ள மின் கம்பத்தில் ஏறி, மின் பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாரத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.ஜெயங்கொண்டம் போலீசார் விசாரிக்கின்றனர். இவருக்கு, 35 வயதில் மனைவி, 10 மற்றும் 9 வயதுகளில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மின் வாரிய அதிகாரிகள் வந்து பார்க்காததால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், பேச்சு நடத்தியதால் அனைவரும் கலைந்துச் சென்றனர்.இதனால், ஜெயங்கொண்டம் - -கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
12-Sep-2025
03-Sep-2025
31-Aug-2025