உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரியலூர்: அரியலூரில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே, வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆசிரியர்களினால் பள்ளி, கல்லூரி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அடுத்தது அரங்கேறி வருகிறது.தற்போது அரியலூரிலும் அதே மாதிரியான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரியலூரில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவிக்கு தமிழ் ஆசிரியர் சுரேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மாணவியை மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன மாணவி இது சம்பந்தமாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Nallavan
மார் 19, 2025 10:59

பனிரெண்டாம் வகுப்பு வரை பெண்கள் பள்ளி மற்றும் கோ- எடுகேஷன் பள்ளிகளில் அரசு பெண் ஆசிரியர்களை மட்டும் நியமிக்க வேண்டும், ஆண்களுக்கு பஸ் ஓட்டுநர், சுமை தூக்குதல், போன்ற கடினமான வேலைகளை மட்டும் கொடுக்க வேண்டும், அப்போதாவது இது போன்ற சம்பவங்கள் குறையலாம்


பேசும் தமிழன்
பிப் 28, 2025 09:51

அப்பா.... அப்பப்பா... என்னப்பா... நடக்குதப்பா... இது தான் விடியாத அரசின் சாதனை போல் தெரிகிறது. ஆளை விடுங்கப்பா. தமிழக மக்கள் படும் பாடு.. போதுமப்பா !!!


Vijay D Ratnam
பிப் 27, 2025 22:35

மாதா, பிதா, குரு, பிறகுதான் தெய்வம். அப்படிப்பட்ட இடத்தில் இருக்கும் ஆசிரியர்கள் பள்ளி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் என்று சீரழித்தால் போக்சோ சட்டத்தில் கைது செய்து மக்களின் வரிப்பணத்தில் ஜெயிலில் வேளாவேளைக்கு சோறு போட்டு வளர்க்கும் நடைமுறை முடிவுக்கு வரவேண்டும். பெற்றோர்கள் தம் செல்வங்களை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறோம். அவர்களை சுலபமாக சீரழிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. குறைந்தபட்சம் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்காவது பள்ளி சிறுமிகளை சீரழிக்கும் குற்றத்துக்கு மரணதண்டனை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.


Karthik
பிப் 27, 2025 21:30

என்னடா நடக்குது இந்த டமீல்நாட்டுல..?? தெனந்தெனம் இதே சேதியா..?? கேக்கவே / படிக்கவே அறுவருப்பா, கேவலமா, அவமாமா இருக்கு இந்த போலிசுக்கு துப்பாக்கி மட்டுந்தா குடுத்தாங்களா?? ரவ உருண்ட குடுக்குலியா?? ஒரு நாலுபேரையாச்சும் போடுங்கைய்யா.. இந்த சமூகத்த காப்பாத்த.. உங்க பேரு வரலாற்றுலேயே பொறிக்க படும். காசுக்காக மட்டுமில்லாம, கொஞ்சம் நீதி நாயத்துக்காகவும் செயல்படுங்க..இத படிக்கும் போலிசாரே.. ப்ளீஸ்..


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 27, 2025 20:46

தாயுடன் 2 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது | Sexual harassment | Minor girls .... இதை ஹிந்து பெயரில் திரியும் கிங்ஸிர்கள் படிக்கணும் ...... அநேகமாக கின்சிர்களாக இருந்தால் பெயர் வெளிப்படுவதில்லை ......


தாமரை மலர்கிறது
பிப் 27, 2025 20:06

தமிழக ஆசிரியர்களுக்கு ஆர் எஸ் எஸ் பாடம் எடுக்க வேண்டும்.


Sampath Kumar
பிப் 27, 2025 19:53

காமத்து பாலை படித்து செய்முறை வில்லங்கம் செய்து இருப்பாரு போல ...


எவர்கிங்
பிப் 27, 2025 19:28

திராவிட மாடல் பள்ளியறை


Gopal
பிப் 27, 2025 18:00

நிறைய ஆசிரியர்கள் மெண்டல் கேஸாக போய் விட்டார்கள்.


Ramalingam Shanmugam
பிப் 27, 2025 17:50

என்னங்கய்யா வந்தேறி ஓங்கோல் துண்டுசீட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை