மேலும் செய்திகள்
வீட்டு சுவர் இடிந்து இருவர் சாவு
25-Oct-2025
அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை எரித்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.திருமானூர் அடுத்த வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சுரேஷ்குமார்(36). இவருக்கும் இவரது மனைவி அனிதாவுக்கும்(28) குடும்பப் பிரச்சனை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்தது.இந்நிலையில், கடந்த 5.11.2021 ஆம் ஆண்டு தம்பதியிடையே ஏற்பட்ட பிரச்னையில் அனிதாவின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி சுரேஷ்குமார் தீ வைத்தார். இதில், பலத்த காயமடைந்த அனிதா உயிரிழந்தார்.வெங்கனூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த வந்த நீதிபதி செல்வம், குற்றவாளி சுரேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து சுரேஷ்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.
25-Oct-2025