உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / தஞ்சை நிதி நிறுவன ஊழியர் அரியலுாரில் எரித்து கொலை 

தஞ்சை நிதி நிறுவன ஊழியர் அரியலுாரில் எரித்து கொலை 

ஜெயங்கொண்டம்; தஞ்சையை சேர்ந்த நிதி நிறுவன பணியாளர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனுாரைச் சேர்ந்தவர் சிவா, 30; தனியார் நிதி நிறுவன ஊழியர். சில நாட்களுக்கு முன், அரியலுார் மாவட்டம், அணைக்கரை பகுதிக்கு பணி நிமித்தமாக சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.இந்நிலையில், அரியலுார் மாவட்டம், ஆயுதகளம் கிராமத்தில் உள்ள செங்கால் ஓடை அருகே கால்நடை மேய்ப்பவர்கள், அந்த பகுதியில் பாதி உடல் கருகிய நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஜெயங்கொண்டம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், அவர் மாயமான சிவா என்பது உறுதியானது. முன்விரோதம் காரணமாக, அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை