உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் /  பஸ் -- கார் மோதல்; இரண்டு பேர் உயிரிழப்பு

 பஸ் -- கார் மோதல்; இரண்டு பேர் உயிரிழப்பு

துறையூர்: துறையூர் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் சென்ற இருவர் உயிரிழந்தனர். அரியலுார் மாவட்டம், நல்லாம்பாளையத்தை சேர்ந்த திருஞானம், 47, சீனிவாசன், சண்முகம், மருதமலை ஆகியோர், அதே பகுதியில் உள்ள கோவிலில் துர்க்கை, விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். சுவாமி சிலைகள் வாங்குவதற்காக, நேற்று காலையில், திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நாகலாபுரத்திற்கு காரில் சென்றனர். அதே ஊரை சேர்ந்த சிவசங்கர், 42, காரை ஓட்டினார். துறையூரை அடுத்த கிழக்குவாடி அருகே சென்னையில் இருந்து துறையூர் நோக்கி வந்த அரசு பஸ்சுடன் கார் நேருக்கு நேர் மோதியது. இதில், சிவசங்கர், திருஞானம் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற மூவரும் காயமின்றி தப்பினர். துறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ