| ADDED : ஆக 06, 2011 02:09 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு, தனியார் நிறுவனம் சார்பில் காபி, டீ ஸ்டால்கள் வழங்கப்படும். மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ் விடுத்த அறிக்கை: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்று திறனாளிகள் சுய தொழில் புரிந்திடும் வகையில், ஹைஜீனிக் பேவரேஜ் எக்ஸ்பிரஸோ எனப்படும் தனியார் நிறுவனம் மூலம் இயக்கப்படும், காபி, டீ ஸ்டால்கள் வைத்து நடத்திட, ஒரு லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்டால், அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்த ஸ்டால் வைத்து நடத்தும் மாற்று திறனாளிகளுக்கு, இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதம் ஊதியமாக வழங்கப்படவுள்ளது.ஹைஜீனிக் பேவரேஜ் எக்ஸ்பிரஸோ எனப்படும் தனியார் நிறுவனம் மூலம் காபி, டீ ஸ்டால் பெற தேவையான தகுதிகள்: * விண்ணப்பதாரர் மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். * ஊனத்தின் அளவு 40 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும். * 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். * நகராட்சி பகுதியில் உள்ள இடத்துக்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடைய அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளிகள், ஹைஜீனிக் பேவரேஜ் எக்ஸ்பிரஸோ தனியார் நிறுவனம் மூலம் காபி, டீ ஸ்டால் பெற தங்களது விண்ணப்பங்களை, மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம், அரியலூர். என்ற முகவரிக்கு 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு, மேற்கண்ட தனியார் நிறுவனம் மூலம் காபி, டீ ஸ்டால் வழங்கப்படும்.