உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / விஜயகாந்த் பிறந்த நாள் விழா கோலாகலம் அரியலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விஜயகாந்த் பிறந்த நாள் விழா கோலாகலம் அரியலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூர்: விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தே.மு.தி.க., அரியலூர் மாவட்ட கழக அலுவலகம் மற்றும் ஒன்றிய நகர கழகங்கள் சார்பில் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தே.மு.தி.க., நிறுவன தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் பிறந்த நாள் விழா, அரியலூர் மாவட்ட தே.மு.தி.க., வினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக கட்சியின் அரியலூர் மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.தொடர்ந்து விஜயகாந்த் நீடூழி வாழ வேண்டி, மாவட்ட இளைஞர் அணி சார்பில், அரியலூர் பெரியகடை வீதியில் உள்ள சுப்ரமணியஸ்வாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதுடன், விஜயகாந்த் பெயரில் பிறந்த நாள் கேக் வெட்டி மக்களுக்கு வழங்கினர். அரியலூர் ஒன்றிய தே.மு.தி.க., சார்பில், அரியலூர் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் உள்ள தாய்மார்கள் மற்றும் பொதுவார்டுகளில் உள்ள நோயாளிகள் உள்பட 250 பேருக்கு ஹார்லிக்ஸ், பிரட், ஆப்பிள் உள்ளிட்ட பொருட்களை, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் வழங்கினார். அரியலூர் நகர தே.மு.தி.க., சார்பில், கே.கே., நகர், சத்யா நகர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. அரியலூர் 1-வது வார்டு, 10-வது வார்டு, சத்திரம் பஸ் ஸ்டாப் பகுதிகளில் தே.மு.தி.க., கொடி ஏற்றி சக்கரை பொங்கல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல், அரியலூர் நகர செயலாளர் சிட்டிபாபு, ஒன்றிய செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், மாவட்ட துணை செயலாளர் ஜான் கென்னடி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிவா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மராஜ், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் கோபாலகிருஷ்ணா, மாவட்ட மீனவர் அணி செயலாளர் மதி, நகர அவைத்தலைவர் பிச்சைபிள்ளை, பொருளாளர் ராஜா, இளைஞர் அணி செயலாளர் கண்ணன், கேப்டன் மன்ற செயலாளர் சுப்ரமணியன், துணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய அவைத்தலைவர் கருப்பன், பொருளாளர் செல்வராஜ், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ