| ADDED : பிப் 12, 2024 11:25 PM
ஜெயங்கொண்டம் : அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கூழாட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 45; அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி அன்பரசி, 38. தம்பதிக்கு துவாரகா, 15, இலக்கியா, 12, ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர்.கடந்த 10ம் தேதி வீட்டில் கோழிக்கறி சமைத்துள்ளனர். அன்று மீதமான சிக்கன் குழம்பை அடுத்த நாள் காலையில் அனைவரும் சாப்பிட்டனர். இதில், அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர்.நான்கு பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இலக்கியா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மற்ற மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஜெயங்கொண்டம் போலீசார் விசாரிக்கின்றனர். குடும்பத்தில் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், சிறுமியின் சடலத்தை வாங்க ஆள் இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.