உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / பட்டாசு தயாரிப்பு கட்டடத்துக்கு சீல்

பட்டாசு தயாரிப்பு கட்டடத்துக்கு சீல்

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், திருவெங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாரப்பன். இவர், அப்பகுதி வயல் வெளியிலுள்ள தன் சொந்தமான ஒரு கட்டடத்தில் அனுமதியின்றி நாட்டு வெடி மற்றும் பட்டாசுகளை தயாரித்து, விற்பனை செய்து வந்துள்ளதாக, அரியலுார் ஆர்.டி.ஓ., மற்றும் திருமானுார் போலீசுக்கு புகார் வந்தது.அதன்படி, சம்பவ இடத்துக்குச் நேற்று சென்ற திருமானுார் போலீசார், சோதனை செய்ததில், மூட்டை மூட்டையாக பட்டாசுகள் இருந்தன. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்து கட்டடத்துக்கு சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ