உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / வீட்டு வரி ரசீதுக்கு லஞ்சம் 2 பேருக்கு ஓராண்டு சிறை

வீட்டு வரி ரசீதுக்கு லஞ்சம் 2 பேருக்கு ஓராண்டு சிறை

அரியலுார்:அரியலுாரில், வீட்டு வரி விதிப்புக்கு, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் நகராட்சி வருவாய் உதவியாளர் இருவருக்கு, தலா, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அரியலுாரை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தன் தாய் பெயரில் உள்ள வீட்டுக்கு, வரி ரசீது கேட்டு, 2013ம் ஆண்டு டிச., 11ல், அரியலுார் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றிய வருவாய் உதவியாளர்களான பில் கலெக்டர்கள் வீரமணி, கண்ணன் ஆகியோரை அணுகினார். அவர்கள், வீட்டு வரி ரசீது போட்டுத் தர 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் புகார்படி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, பில் கலெக்டர்கள் லஞ்சம் வாங்கிய போது, இருவரையும் கைது செய்து, அரியலுார் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி மணிமேகலை, லஞ்சம் வாங்கிய வீரமணி, கண்ணன் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி