உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சும்மா போன பாம்பை பிடித்த போதை ஆசாமிக்கு கொத்து

சும்மா போன பாம்பை பிடித்த போதை ஆசாமிக்கு கொத்து

சென்னை:சென்னை திருமங்கலம், டி.வி., நகரைச் சேர்ந்தவர் அருண், 25. இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில்ல மது போதையில் திருமங்கலம் பகுதியிலுள்ள மத்திய அரசு வாடகை குடியிருப்பின் வெளியே நின்றுள்ளார்.அப்போது அவ்வழியாக பாம்பு ஒன்று சென்றுள்ளது. போதையில் இருந்த அருண், அந்த பாம்பை கையால் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது, பாம்பு அவரின் கையில் கொத்தியதாக தெரிகிறது.அதிர்ச்சியடைந்த அவர் அலறியடித்து, அங்கிருந்த ஆட்டோவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று, தற்போது நலமாக உள்ளார்.உண்மையாகவே பாம்பு கொத்தியதா அல்லது போதையில் பொய் கூறினாரா என, மருத்துவமனையில் உள்ள அருணிடம், திருமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை