உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டடத்தால் அபாய கட்டடம்

பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டடத்தால் அபாய கட்டடம்

சித்தாமூர்:சித்தாமூர் ஒன்றியம், சின்ன கயப்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 30 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டடம் உள்ளது.இக்கட்டடத்தின் மேல்தளம் சேதடைந்து, சுவர்கள் பலமிழந்து உள்ளதால், மழைக்காலத்தில் பலத்த காற்று வீசினால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பள்ளி குழந்தைகளின் நலன் கருதி, பள்ளி வளாகத்தில், பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ