உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடப்பாக்கத்தில் மார்க்கெட் கட்டடம் இருந்தும் சாலையோரம் மீன் விற்பதால் இடையூறு

கடப்பாக்கத்தில் மார்க்கெட் கட்டடம் இருந்தும் சாலையோரம் மீன் விற்பதால் இடையூறு

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில், பல ஆண்டுகளாக மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இங்கு, 30க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அமைக்கப்பட்டு, கடப்பாக்கம் குப்பம், ஆலம்பரைக்குப்பம், பனையூர் குப்பம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் பிடிக்கப்படும், மீன், இறால், நண்டு போன்ற கடல்சார் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.மீன் கடைகள் வாயிலாக வெண்ணாங்குப்பட்டு, கப்பிவாக்கம், விளம்பூர், வேம்பனுார் போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிப்போர் பயனடைந்து வருகின்றனர்.மின் விற்பனை செய்ய போதிய இட வசதி இல்லாமல் வியாபாரிகள் அவதிப்பட்டு வந்தநிலையில், 10 ஆண்டுகளுக்கு முன், பேரூராட்சி சார்பாக மீன் மார்க்கெட் கட்டடம் கட்டித்தரப்பட்டது.சில காலமே பயன்படுத்தப்பட்ட கட்டடம், நாளடைவில் கைவிடப்பட்டு, சாலை ஓரத்தில் கடைகள் அமைத்து, தற்போது மீன் விற்பனை நடந்து வருகிறது.இதனால், மீன் மார்க்கெட் கட்டடம் பயன்பாடு இல்லாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்படும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், ஆலம்பறைகோட்டைக்கு செல்லும் சுற்றுலாப் பயணியருக்கு இடையூறாக உள்ளன.மேலும், வார விடுமுறை நாட்களில், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மீன் மார்க்கெட் கட்டடத்தில் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ