உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டிவிசன் ஹாக்கி அபிபுல்லா மெமோரியல் வெற்றி

டிவிசன் ஹாக்கி அபிபுல்லா மெமோரியல் வெற்றி

சென்னை, சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் அணிகளுக்கான ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கின்றன.இதில், 33 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் எட்டு குழுக்களாக பிரிந்து, லீக் முறையில் வார இறுதி நாட்களில் மட்டும் மோதுகின்றன.அந்த வகையில், நேற்று முன்தினம் நடந்த, 'லீக்' ஆட்டங்களில், சேலஞ்சர்ஸ் அணி, 4 - 1 என்ற கணக்கில், தமிழக மின் வாரிய அணியை தோற்கடித்தது.மற்றொரு போட்டியில், மெட்ராஸ் புளூஸ் அணி, 3 - 1 என்ற கணக்கில் யூத் விங்ஸ் அணியையும், ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணி, 5 - 0 என்ற கணக்கில், கொரட்டூர் புல் மூன் அணியையும் வீழ்த்தின.அபிபுல்லா மெமோரியல் அணி, 6 - 0 என்ற கணக்கில், அண்ணா மெமோரியல் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை