மேலும் செய்திகள்
பைக் கேட்டு அடம்பிடித்து தீக்குளித்த இளைஞர் பலி
11-Feb-2025
மதுரவாயல், திருச்சியை சேர்ந்தவர் கோபி, 37. இவர், சென்னை சூளைமேடில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணி செய்து வந்தார். அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து, 31,000 ரூபாய் முன்பனமாக பெற்ற கோபி, பணத்தை திருப்பி கொடுக்காமல் வேலையை விட்டு நின்றார்.இதனால் ஆத்திரமடைந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் விஜய், ஏமாற்றி சென்ற கோபியை தேடிவந்தார். கடந்த 28ம் தேதி, வானகரம் மீன் மார்க்கெட் அருகே நின்ற கோபியை, தன் இரு சக்கர வாகனத்தில் விஜய் கடத்தி சென்றார்.சூளைமேடில் உள்ள ஒரு வீட்டில் கோபியை அடைத்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தன்னுடன் பணியாற்றும் நண்பர் திவாகரையும், 24, வர வைத்து, இருவரும் சேர்ந்து கோபியை தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பி வந்த கோபி, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, சூளைமேடு மேற்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் விஜய், 27, பூந்தமல்லியை சேர்ந்த திவாகர், 24, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
11-Feb-2025