உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அச்சிறுபாக்கம் துணை மின் நிலையத்தில் தீ விபத்து

அச்சிறுபாக்கம் துணை மின் நிலையத்தில் தீ விபத்து

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் பகுதியில், எலப்பாக்கம் சாலையில் 230 கி.வோ., திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளது. துணை மின் நிலையத்தில் இருந்து பள்ளிப்பேட்டை, பெரியார் நகர், கிரசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, மின்வினியோகம் செய்யப்படுகிறது.நேற்று காலை 7:30 மணிக்கு, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து வரும் உயர் மின்னழுத்த மின்சாரத்தை கட்டுப்படுத்தும், எஸ்.எஸ்., 230 கி.வோ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.அதனால், மின் வினியோகம் நிறுத்தப்பட்டு, இதுகுறித்து அச்சிறுபாக்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கார்பன் - டை - ஆக்சைடு மற்றும் சோடியம் - பை - கார்பனேட் வேதி பொருட்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர். பின், மின் இணைப்பு மாற்றி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ