உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நந்திவரம் ஏரியில் குப்பை கழிவுகள் நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு

நந்திவரம் ஏரியில் குப்பை கழிவுகள் நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு

கூடுவாஞ்சேரி : நந்திவரம் ஏரியை சுற்றி குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதால், ஏரி நீர் மாசடைந்து வருவதாக, சமூக நல ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, நந்திவரத்தைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் புதுமை அன்பழகன் கூறியதாவது:நந்திவரம் ஏரியில் எப்போதும் நீர் இருந்து கொண்டே இருக்கும். இந்த ஏரி, இதுவரை வறண்டதில்லை. 339.50 ஹெக்டெர் பரப்பளவைக் கொண்டது.ஏரியை சுற்றி, ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, பெருமாட்டுநல்லுார் ஆகிய ஊராட்சிகள் உள்ளன.காட்டூர் சாலையிலிருந்து பெருமாட்டுநல்லுார் நோக்கி செல்லும் நந்திவரம் ஏரிக்கரை சாலையில், குப்பைக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மீன் கழிவுகள் போன்றவற்றை வீசிச் செல்கின்றனர்.இதனால், ஏரிக்கரையோரம் சாலையில் செல்லும்போது துர்நாற்றம் ஏற்படுகிறது.இந்த ஏரி, பொதுப் பணித் துறை கட்டுப் பாட்டில் உள்ளது. எனவே, ஏரிக்கரையை சுற்றி ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன.குப்பைக் கழிவுகளை கொட்டுவதால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து, நீரின் சுவையும் குறையத் துவங்கியுள்ளது.எனவே, நீர்நிலை பகுதிகளில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்து, தேங்கிய குப்பைக் கழிவுகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ