உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புத்தக விழாவில் விதை சொல் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்

புத்தக விழாவில் விதை சொல் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு புத் தகதிருவிழாவில், வேளாண்மை துறையின், விதைகளை கண்டுபிடித்து விளையாடும்போட்டி யில், அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து, ஆறாவது ஆண்டு செங்கை புத்தக திருவிழா, செங்கல்பட்டு அலிசன்காசி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில்,20ம் தேதி துவங்கி, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.இதைத்தொடர்ந்து, வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, வேளாண் துறை சம்பந்தப்பட்ட நலத்திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்ஈர்க்கும் வகையில், விதைகளை கண்டுபிடித்து பெயர் சொல்லும் விதை விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது.இதில், 20 வகையான தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களின் விதைகள்காட்சிப்படுத்தப்பட்டு, யார் அதிக விதைகளை கண்டிபிடிக்கின்றனர் என்ற போட்டி நடத்தப்பட்டது.இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் நேற்று, அச்சிறுபாக்கம் பகுதி அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று, பரிசுகளை வென்றனர்.இன்று 25ம் தேதி,சப்-கலெக்டர் மாலதி ெஹலன் தலைமையில் புத்தக கண்காட்சி நடக்கிறது. முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.'இடுக்கன் வருங்கால் நகுக' என்ற தலைப்பில், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 'மீண்டும்தலைப்புச் செய்திகள்' தலைப்பில், பட்டி மன்ற பேச்சாளர் விஜய சுந்திரி ஆகியோர் பேசுகின்றனர்.இதில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை