உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பிறப்பு சான்றிதழ் கோரி இருளர் மனு

பிறப்பு சான்றிதழ் கோரி இருளர் மனு

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, மின்னல் சித்தாமூர் ஊராட்சி உள்ளது. இதன்கீழ், மின்னல் கீழ்மின்னல், கீழ்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன.இந்த கிராமப் பகுதிகளில் வசிக்கும் இருளர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் இல்லை.இதனால், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாத சூழல் உள்ளது.அதனால், ஊராட்சி தலைவர் ஏற்பாட்டில், மின்னல் சித்தாமூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ