| ADDED : ஜூன் 21, 2024 01:40 AM
செங்கல்பட்டு:திருப்போரூர் அடுத்த படூர் கிராமத்தில், தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில், ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர், 2016ம் ஆண்டு சீட்டு பணம் கட்டி வந்தார்.அவருக்கு பணம் தராமல், அந்நிறுவனம் ஏமாற்றி வந்தது. இதுகுறித்து, அவர் அளித்த புகாரின்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க, தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, வரும் 26ம் தேதி ஆஜராக,நீதிபதி ஜெயஸ்ரீ நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.