உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அச்சிறுபாக்கம் பஸ் நிறுத்தத்தில் சிசிடிவி பொருத்த வலியுறுத்தல்

அச்சிறுபாக்கம் பஸ் நிறுத்தத்தில் சிசிடிவி பொருத்த வலியுறுத்தல்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதியில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில், அச்சிறுபாக்கத்திலிருந்து சென்னை செல்லும் புறவழிச்சாலையில், பயணியர் பேருந்து நிறுத்தம் உள்ளது.தென் தமிழகத்திலிருந்து வரும் பேருந்துகள், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதி பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற நகர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர், கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பலதரப்பட்ட மக்களும், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆபத்தான வளைவு பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில், கண்காணிப்பு கேமரா அமைக்கப்படவில்லை.அப்பகுதியில் தனிநபர் வைத்துள்ள கண்காணிப்பு கேமராவும், உரிய இணைப்பு இன்றி, பழுதாகி காட்சி பொருளாக உள்ளது.இதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் மற்றும் திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதில், போலீசாருக்கு சிக்கல் நீடித்து வருகிறது.எனவே, பேருந்து நிறுத்தம் பகுதியில், கண்காணிப்பு கேமரா அமைத்து, பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பேருந்து பயணியர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்