உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மஞ்சப்பை விழிப்புணர்வு செல்பி பாயிண்டில் ஆர்வம்

மஞ்சப்பை விழிப்புணர்வு செல்பி பாயிண்டில் ஆர்வம்

செங்கல்பட்டு. செங்கல்பட்டு புத்தக திருவிழாவில், மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செல்பி பாயிண்டில், அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து, ஆறாவது ஆண்டு, செங்கை புத்தகத்திருவிழா, செங்கல்பட்டு அலிசன்காசி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், புத்தக திருவிழா வரும் 28ம் தேதிவரை நடக்கிறது.மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழுவினர் டாக்டர்கள் சுந்தரராஜன், அரசு, பிச்சுமணி, பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.மாசில்லா நகரத்தை உருவாக்கும் வகையில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செல்பி பாயிண்ட்டில் இருந்து, அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்று, தமிழ் இலக்கியம் - புதிய களங்கள் என்ற தலைப்பில், சென்னை மாவட்ட நுாலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன், ஏழாம் அறிவும், நாலாம் கையும் என்ற தலைப்பில் பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ