மேலும் செய்திகள்
சேதமான தரைப்பாலத்தை சீரமைக்க அமைக்க கோரிக்கை
01-Feb-2025
மறைமலை நகர், காயரம்பேடு- மறைமலை நகர் சாலை 6 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை வழியாக கலிவந்தபட்டு, கடம்பூர் கூடலுார் பகுதியில் இருந்து மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்கின்றனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்த சாலை வழியாக மறைமலை நகர், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். மேலும் இந்த சாலை கூடுவாஞ்சேரி - நெல்லி குப்பம் சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையில் கடம்பூர், கலிவந்தபட்டு உள்ளிட்ட பகுதிகளில், சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. அவ்வபோது ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு சமன் செய்யப்படுகிறன.வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் மீண்டும் மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜல்லி கற்கள் டயர்களில் குத்தி பஞ்சராகி விடுகின்றன. எனவே இந்த பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
01-Feb-2025