செங்கல்பட்டு மாவட்டம், திருக்கச்சூரில் அமைந்துள்ளது அஞ்சனாட்சி அம்பாள் உடனுறை கச்ச பேஸ்வரர், தியாகராஜர் கோவில். ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த இக்கோவில், சோழர்களால்கட்டப்பட்டதாக கூறப் படுகிறது. தற்போதைய கொத்து அமைப்பு, 16ம் நுாற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.அறநிலையத்துறைகட்டுப்பாடில் உள்ளஇக்கோவிலுக்கு திருப்பணி முடிந்த நிலையில், வரும் 21ம் தேதி அஷ்ட பந்தன மகா கும்பாபி ஷேகம் நடக்க உள்ளது.இதனை முன்னிட்டு கடந்த, 15ம் தேதி சாந்தி ஹோமம், அனுக்ஜை நடந்தது.கடந்த 16ம் தேதி கணபதி ஹோமம், தன, கோ பூஜை நடந்தது. நேற்று காலை நவக்கிரஹ, மூர்த்தி ஹோமம் நடந்தது. இன்று காலை திசா, ஸ்ம்மிதா ஹோமம், யாகசாலை அலங்காரம் நடக்கிறது.மாலை கும்ப அலங்காரம், கலா கர்ஷணம், யாகசாலை பூஜை, அதிவாச யாகம், பூர்ணாஹுதி நடக்கிறது.நாளை விசேஷ சாந்தி, யாகசாலை பூஜை, விசேஷ ஹோமங்கள் நடக்கவுள்ளன. 19ம் தேதி அஷ்டபந்தனம் சார்த்துதல் நிகழ்வு நடக்கிறது.20ம் தேதி மாலை நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, ஸ்பர்சாஹுதி, பூர்ணாஹுதி, ஹோ சோடஷாஸ தீபாராதனை நடக்கிறது.மகா கும்பாபிஷேக நாளான, 21ம் தேதி காலை 6:00 மணி முதல் யாகசாலை பூஜை, விசேஷ ஹோமம், மகா பூர்ணாஹுதி, கலசப்புறப்பாடு நடக்கிறது. காலை 10:30 மணிக்கு அனைத்து விமானங்களுக்கு கலச நீர் சேர்த்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப் படுகிறது. --- நமது நிருபர்- -