உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பவித்சிங் நினைவு டி-20 கிரிக்கெட் பைனலில் லயோலா கல்லுாரி

பவித்சிங் நினைவு டி-20 கிரிக்கெட் பைனலில் லயோலா கல்லுாரி

சென்னை,வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லுாரி சார்பில், பவித்சிங் நினைவு டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.இதில் ஆண்களுக்கான 'லீக்' போட்டியில், தொடர் வெற்றியைக் குவித்த லயோலா கல்லுாரி அணி, அரையிறுதியில் கோவை கே.பி.ஆர்., கல்லுாரி அணியை எதிர்கொண்டது.முதலில் களமிறங்கிய லயோலா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு, 176 ரன்கள் எடுத்தது.சவாலான இலக்குடன் களமிறங்கிய கே.பி.ஆர்., அணி, 137 ரன்களில் ஆட்டமிழந்தது.இதனால், லயோலா கல்லுாரி அணி, 39 ரன்களில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.மற்றொரு போட்டியில், குருநானக் கல்லுாரி அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ