உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அடிப்படை வசதியற்ற பஸ் நிலையம் மடிப்பாக்கம் பயணியர் கடும் அவதி

அடிப்படை வசதியற்ற பஸ் நிலையம் மடிப்பாக்கம் பயணியர் கடும் அவதி

மடிப்பாக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர், மாநகர பேருந்துகளை பயன்படுத்தி, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இதை கருத்தில் கொண்டு, மடிப்பாக்கத்தில் இருந்து சைதாப்பேட்டை, தாம்பரம், கிண்டி, கோயம்பேடு, அம்பத்துார், பாரிமுனை, அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.'பீக் ஹவர்ஸ்' எனும் காலை, மாலை நேரத்தில் பேருந்தில் கூட்டம் அலைமோதும். எனவே, மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக பயணியர் கோரி வருகின்றனர். இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.பயணியர் கூறியதாவது:பேருந்து நிலையம், தனியார் வாகன நிறுத்துமிடங்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால், பேருந்துகள் திரும்பி நிற்பதற்குக்கூட போதுமான வசதிகள் இல்லை.இரவில் மாடுகள் நிறைந்து மாட்டுத் தொழுவமாக காணப்படுகிறது. சாணக் கழிவால் அவ்வழியே நடக்க சிரமமாக இருக்கிறது. பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய நிழற்குடை இல்லை. கழிப்பறை அமைக்கப்பட்டிருந்தாலும், மழைக்காலத்தில் அதைச் சுற்றி தண்ணீர் தேங்குவதால், அங்கு செல்ல முடிவதில்லை.பேருந்து நிலையத்திற்கு போதிய நிழற்குடை, சுற்றுச்சுவர், 'டைம் கீப்பர்' தேவை. பேருந்துகள் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்பு பலகைகளை நிறுவ வேண்டும்.'சீசன் டிக்கெட்' பெறும் வகையில், கவுன்டர் அமைக்க, மாநகர போக்குவரத்துக் கழகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ