மேலும் செய்திகள்
நெஞ்சு வலியால் தொழிலாளி சாவு
12-Mar-2025
மாடு மீது பைக் மோதி வாலிபர் பலி
10-Mar-2025
திருப்போரூர்:கேளம்பாக்கம் அடுத்த தாழம்பூர், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்.48; பால் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், வீட்டின் அருகே மாட்டுக்கொட்டையில் மின் விளக்குகளை அணைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சுரேஷ் மீது மின்சாரம் பாய்ந்து, மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தோர் சுரேஷை மீட்டு, படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுரேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
12-Mar-2025
10-Mar-2025