உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் பகுதியில் குரங்குகள் தொல்லை

மதுராந்தகம் பகுதியில் குரங்குகள் தொல்லை

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. அதில், 20, 21வது வார்டுக்கு உட்பட்ட அப்பன் அய்யங்கார் தெரு, பார்த்தசாரதி தெரு, ஆனந்தா நகர் பகுதிகள், வீடுகள் நிறைந்த பகுதி.அங்கு கடந்த சில நாட்களாக, 15க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக உலா வருவதால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.அப்பன் அய்யங்கார் தெரு வழியாக, மதுராந்தகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவியரை, குரங்குகள் அச்சுறுத்தி வருகின்றன.மேலும், வீட்டு மாடியில் துணிகள் உலர்த்தவும், விவசாய தானியங்களை உலர்த்தவும் முடியாமல், பகுதிவாசிகள் அவதி அடைந்து வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:அப்பன் அய்யங்கார் தெருவில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது.நாள் முழுதும் வீடுகளை பூட்டி வைக்க வேண்டிய சூழல் உள்ளது. ஒரு சில சமயங்களில், வீட்டினுள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.குரங்குகள் தொல்லையில் இருந்து பாதுகாக்க, வீடுகளில் இரும்பு கம்பி வலை வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.நகராட்சி மற்றும் வனத்துறை அதிகாரிகள், குரங்குகளை பிடித்து, காட்டுப் பகுதியில் விட வேண்டும் என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ