உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இருள் சூழ்ந்த புறவழிப்பாதை வாகன ஓட்டிகள் அச்சம்

இருள் சூழ்ந்த புறவழிப்பாதை வாகன ஓட்டிகள் அச்சம்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பகுதியில், ஆசிரியர் நகர் சந்திப்பில் துவங்கி, கொத்திமங்கலம் சந்திப்பு வரை, செங்கல்பட்டு - சதுரங்கப்பட்டினம் புறவழிச் சாலையாக உள்ளது.செங்கல்பட்டு, மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதி வாகனங்கள், இவ்வழியில் ஏராளமாக கடக்கிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன.இப்பகுதியில் தெருவிளக்குகள் இன்றி, இருள் சூழ்ந்துள்ள நிலையில், மர்மநபர்கள் மறைந்திருந்து, பயணியரை மறித்து, வழிப்பறி செய்கின்றனர். இருள் சூழ்ந்து காணப்படுவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க, தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ