உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெரும்பாக்கத்தில் புதிய மின்மாற்றி

பெரும்பாக்கத்தில் புதிய மின்மாற்றி

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில், புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.பெரும்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக, மின்பற்றாக்குறை மற்றும் மின்னழுத்தம் காரணமாக, மின்சாதன பொருட்களான மிக்ஸி கிரைண்டர், மின்விசிறி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வந்தன.பெரும்பாக்கம் காலனி பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்கு, புதிதாக மின்மாற்றி அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிலையில், எல்.எண்டத்துார் மின் நிலைய அதிகாரிகளின் தொடர் முயற்சி காரணமாக, மின்மாற்றி அமைக்கும் பணி நடந்து வந்தது.இந்நிலையில் நேற்று, மதுராந்தகம் செயற்பொறியாளர் அக்னி முத்து, பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை