உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மொபைல் போன் சிக்னல் இல்லை குமுறும் குமுளி ஊராட்சி மக்கள்

மொபைல் போன் சிக்னல் இல்லை குமுறும் குமுளி ஊராட்சி மக்கள்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த குமுளி ஊராட்சியில், மொபைல் போன் சிக்னல் முறையாக இல்லாததால், பகுதிவாசிகள், பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது ஊராட்சி நிர்வாகமும் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது குமுளி ஊராட்சி. இங்கு ஒன்பது வார்டுகள் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,487 நபர்கள் வசிக்கின்றனர்.கிராமிய மணத்துடன் திகழும் குமுளி ஊராட்சியில், பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக வேளாண் தொழில் உள்ளது.இந்த ஊராட்சியில், மொபைல் போன் சிக்னல்கள் முறையாக இல்லை. இதனால், கல்லுாரி மாணவர்கள் இணைய சேவையைப் பயன்படுத்த முடியவில்லை. தவிர, வரி வசூல் உள்ளிட்ட அலுவலகப் பணியை துரிதமாக செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தத்தளிக்கிறது.பகுதிவாசிகள் கூறியதாவது:ஊராட்சியில் 90 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்தி வந்தாலும், வீட்டின் மாடியிலோ அல்லது ஊரைவிட்டு வெளியேறி, பிரதான சாலைக்கு சென்றால் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது.நகரங்களில் ஐந்தாம் அலைவரிசையில் மொபைல் போன் சேவை கிடைக்கும்போது, இரண்டாம் அலைவரிசை சேவையைக்கூட பெற முடியாமல் மிகுந்த இன்னல்களை சந்திக்கிறோம்.அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை தொடர்பு கொள்ள பெரும் இடையூறு ஏற்படுகிறது. விவசாயிகளால் அன்றைய சந்தை நிலவரத்தை தெரிந்துகொள்ள இயலவில்லை.எனவே, குமுளி ஊராட்சியில் மொபைல் போன் சிக்னல் கிடைக்க, சம்பந்தப்பட்ட மொபைல் அலைவரிசை நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ