மேலும் செய்திகள்
வெங்காடு சாலையில் படர்ந்துள்ள கருவேல மரங்கள்
28-Aug-2024
மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி -- ஒழலூர் சாலை 3 கி.மீ., நீளம் உடையது. இச்சாலையை ஒழலூர், மணப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்றுவர பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் பேருந்து வசதி இல்லாததால், அனைவரும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையில் பல இடங்களில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் சாலையோரம் உள்ள கருவேல மரங்கள் இருப்பது தெரியாமல், தடுமாறி கீழே விழும் அபாய நிலை உள்ளது.
28-Aug-2024