மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
2 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
2 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
2 hour(s) ago
மறைமலை நகர் : சென்னை மற்றும் புறநகர்பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில்,தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்கி உள்ளனர்.இவர்கள், வார விடுமுறையுடன் சேர்ந்து, பக்ரீத் விடுமுறையும் வந்ததையடுத்து, கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில், சொந்த ஊர்களுக்கு கார், இருசக்கர வாகனங்களில் சென்றனர்.நேற்று விடுமுறை முடிந்ததையடுத்து, மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்தனர். அதிக அளவில் வாகனங்கள் வந்த வண்ணம் இருந்ததால், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.இதன் காரணமாக, 2 கி.மீ., துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 2 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை, மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago