உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முதல்வர் ஸ்டாலின் வருகை செங்கையில் முன்னேற்பாடு

முதல்வர் ஸ்டாலின் வருகை செங்கையில் முன்னேற்பாடு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிய திட்டங்கள் துவக்க விழா மற்றும் புதிய கட்டடங்கள் திறப்பு விழா, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, செங்கல்பட்டு, மலையடி வேண்பாக்கம் ஐ.டி.ஐ.,க்கு சொந்தமான இடத்தில், வரும் 11ம் தேதி நடக்கிறது.இந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்று, புதிய திட்டங்கள் மற்றும் புதிய கட்டடங்கள் திறப்பு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.இதைத்தொடர்ந்து, மலையடி வேண்பாக்கம் ஐ.டி.ஐ., வளாகத்தில், மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்ரபசன், நேற்று ஆய்வு செய்தார்.மேடை அமைக்கும் பணி, பயனாளிகளுக்கு இருக்கைகள், குடிநீர் மற்றும் தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செயல்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில், கலெக்டர் அருண்ராஜ், எஸ்.பி., சாய் பிரணித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ