உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கனவு இல்லம் திட்டத்திற்காக விண்ணப்பம் பெறும் பணி

கனவு இல்லம் திட்டத்திற்காக விண்ணப்பம் பெறும் பணி

திருக்கழுக்குன்றம் : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், குடிசைகளை கான்கிரீட் வீடாக மேம்படுத்த, ஊராட்சி நிர்வாகங்கள் பயனாளிகளிடம் விண்ணப்பம் பெறுகின்றன.தமிழக அரசு, ஊராட்சிப் பகுதிகளில், ஏழைகள் வசிக்கும் குடிசைகளை, கான்கிரீட் வீடாக மேம்படுத்த உள்ளது. இதையடுத்து, பட்டா இடத்தில் உள்ள குடிசைகளை, ஊராட்சி நிர்வாகங்கள், கடந்த 2021ல் கணக்கெடுத்தன. அவற்றை கான்கிரீட் வீடாக மேம்படுத்த, கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்படுவதாக, அரசு சட்டசபையில் அறிவித்தது.அதற்காக, 2024 - 25 திட்டத்தில், பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட விண்ணப்பம் பெறப்படுகிறது.இது குறித்து, திருக்கழுக்குன்றம் வட்டார, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் உள்ள, 54 ஊராட்சிகளில் கணக்கெடுக்கப்பட்ட தகுதியான குடிசைதாரர்களிடம் விண்ணப்பம் பெற, துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.நாங்கள் விண்ணப்பம்அளித்துள்ளோம். பயனாளியின் பெயர், குடும்ப அட்டை, ஆதார் எண்கள், வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து, எங்களிடம் திரும்ப ஒப்படைக்கவேண்டும்.அரசு ஆண்டிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயித்து, நிதி ஒதுக்கும் என தெரிகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்