உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

செங்கல்பட்டு, வயலுார் கிராமத்தில், கல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில், கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.அச்சிறுபாக்கம் அடுத்த, நெற்குணம் ஊராட்சியில், வயலுார் கிராமம் உள்ளது. இங்கு, புதிதாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், கல் குவாரி துவங்க உள்ளனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சியை சேர்ந்த நுாறுக்கும் மேற்பட்டவர்கள், செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு அளிக்க நேற்று, வந்தனர். கூட்டம் அதிகமாக வந்ததால், பாதுகாப்பு கருதி, நுழைவாயில் பூட்டப்பட்டது.அதன்பின், கிராம வாசிகள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை தரையில் வீசி தர்ணாவில் ஈடுபட்டனர்.கோரிக்கையை வலியுறுத்தி, செய்யூர் எம்.எல்.ஏ., பாபு மற்றும் கிராமவாசிகள், கலெக்டர் அருண்ராஜை சந்தித்தனர். இந்த மனு மீது, விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார். பின், கிராமவாசிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி