மின்கம்பங்களில் செடி, கொடிகள் அகற்றம்
கூடுவாஞ்சேரி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சில நாட்களாக தொடர் மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் புகாரின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அதில், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் மீது அடர்ந்து படர்ந்துள்ள செடி, கொடிகளால் தான் தொடர் மின்தடை ஏற்பட்டு வந்தது உறுதியானது.அதனால், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் மீது படர்ந்துள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்ற, கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.அதைத் தொடர்ந்து, நந்திவரத்தில் உள்ள வண்டலுார் தாலுகா அலுவலகம், கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றும் பணியில், நேற்று மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.