16 மின்சார ரயில்களின் சேவை செங்கல்பட்டு தடத்தில் மாற்றம்
சென்னை, எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், இன்றும், நாளையும், செங்கல்பட்டு தடத்தில், 16 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடற்கரை - செங்கல்பட்டு நண்பகல் 12:28, 12:40, மதியம் 1:45 மணி ரயில்களும், கடற்கரை - அரக்கோணம் மதியம் 1:00 மணி ரயிலும், தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் செங்கல்பட்டு - கடற்கரை காலை 10:40, காலை 11:00, 11:30, நண்பகல் 12:00, திருமால்பூர் - கடற்கரை காலை 11:05 மணி ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் முழு ரத்து
கடற்கரை - தாம்பரம் நண்பகல் 12:15, மதியம் 1:15, 1:30, 2:00 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன தாம்பரம் - கடற்கரை நண்பகல் 12:05, 12:35, மதியம் 1:00 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றனஇவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.