தென் மாவட்ட பஸ்கள் இனி தாம்பரம் வராது
சென்னை, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் செங்கல்பட்டு, கிளாம்பாக்கம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டன. தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறையினர், அந்த பேருந்துகளை கிளாம்பாக்கத்திலேயே நிறுத்த பரிந்துரை செய்தனர்.இதை, அரசு போக்குவரத்துக் கழகங்களின் பொதுமேலாளர்கள் ஏற்றுள்ளனர். அதன்படி, நாளை முதல், தென்மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மட்டுமே இயக்கப்படும். அங்கிருந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணியருக்காக, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், 693 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.