உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாநில யூத் தடகள சாம்பியன்ஷிப் பாடி ஸ்போர்ட்ஸ் வீராங்கனை சாதனை

மாநில யூத் தடகள சாம்பியன்ஷிப் பாடி ஸ்போர்ட்ஸ் வீராங்கனை சாதனை

சென்னை, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், ஆறாவது மாநில அளவிலான யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், நேற்று காலை துவங்கின. போட்டியில், 18, 20 மற்றும் 23 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே பங்கேற்கலாம்.

'ரேஸ் வாக்' போட்டி

இதில், 100 மீ., 200 மீ., 1,500 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் என, ஆண்களுக்கு 59 வகை போட்டிகளும், பெண்களுக்கு 57 வகை போட்டிகளும் தனித்தனியாக நடக்கின்றன. மாநிலம் முழுதும் இருந்து, 1,200 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.காலை நடந்த பெண்களுக்கான யு - 23, 100மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், பாடி ஸ்போர்ட்ஸ் கிளப் வீராங்கனை அக் ஷிதா, போட்டியின் துாரத்தை 14.44 வினாடியில் கடந்து புதிய சாதனை படைத்தார்.இதற்கு முன், 2024ல் எல்ஷடாய் கிளப் வீராங்கனை அனந்திதா, 15.47 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.தொடர்ந்து, சென்னையை சேர்ந்த ஷைனி கிளாட்சியா, எல்ஷடாய் கிளப் வைஷாலி ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை வென்றனர்.முதல் முறையாக நடத்தப்பட்ட 20 மீ., 'ரேஸ் வாக்' போட்டியில், பாடி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் நமீரா பாஹிமா முதலிடத்தை பிடித்தார்.அவரை தொடர்ந்து, அதே கிளப்பை சேர்ந்த ஷல்லு மற்றும் லின்ஷி ஆகியோர் முறையே, அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றினர்.

முதலிடம்

ஆண்களுக்கான யு - 23 குண்டு எறிதலில், எஸ்.டி.ஏ.டி.,யின் கவுதமன், 11.07மீ., எறிந்து முதலிடத்தை பிடித்தார். 9.55 மீ., எறிந்த மற்றொரு எஸ்.டி.ஏ.டி., வீரர் சுந்தரமூர்த்தி இரண்டாமிடத்தை வென்றார்.அதே பிரிவில், 10,000 மீ., ஓட்டத்தில், கலாம் ஸ்போர்டஸ் கிளப் வீரர் சுகுமார், முதலிடத்தை பிடித்தார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை