மேலும் செய்திகள்
மின்சார ரயில் ரத்து: தாம்பரத்தில் நெரிசல்
10-Mar-2025
தாம்பரம்:தாம்பரம் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் மாலை, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில், பிளாட்பாரம் - 1ல் வந்து நின்றது.அப்போது, முதல் வகுப்பில் பயணம் செய்த பயணியரிடம் பெண் டிக்கெட் பரிசோதகர், பயணச்சீட்டு சோதனையில் ஈடுபட்டார்.அந்த பெட்டியில் இருந்து இறங்கிய லோகேஷ்ராஜ், 30, என்பவரிடம் டிக்கெட் கேட்டபோது, அவர் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை காண்பித்துள்ளார்.அதை பார்த்த டிக்கெட் பரிசோதகர், நீங்கள் முதல் வகுப்பில் பயணம் செய்துள்ளீர்கள். அதனால் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார்.ஆனால், லோகேஷ்ராஜ், பெண் அதிகாரி கூறியதை கேட்காமல், அங்கிருந்து சென்றார். அப்போது, அருகேயிருந்த டேனிஸ், 35, என்ற ஆண் டிக்கெட் பரிசோதகர், கோகுல்ராஜை தடுத்து நிறுத்தினார்.அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கையால் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.அப்போது, அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், கோகுல்ராஜை பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து, அவர் அபராத தொகை செலுத்தியதோடு, மன்னிப்பு கேட்டதையடுத்து, அங்கிருந்து அனுப்பினர்.
10-Mar-2025