உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போஸ்ட் ஆபிஸ் பூட்டுடைத்து கொள்ளை முயற்சியால் பரபரப்பு

போஸ்ட் ஆபிஸ் பூட்டுடைத்து கொள்ளை முயற்சியால் பரபரப்பு

சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேலுார் கிராமத்தில், விநாயகர் கோவில் அருகே அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல பணியை முடித்துவிட்டு, அலுவலகத்தை பூட்டி சென்றனர்.நேற்று காலை அக்கம் பக்கத்தினர் பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து, அஞ்சலக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.ஊழியர்கள் வந்து பார்த்தபோது, அஞ்சலகத்தில் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பணம் ஏதும் இல்லாததால் மர்ம நபர்கள் திரும்பச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து, சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.கடந்தாண்டு ஜூலை 7ம் தேதி, இதே அலுவலகத்தின் பூட்டை உடைத்து, பண பாதுகாப்பு பெட்டியில் இருந்த 55,000 ரூபாய் திருடப்பட்டது.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தற்போது மீண்டும் கொள்ளை முயற்சி நடந்திருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ