வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஏதோ நோபல் பரிசு வாங்கிவந்தவன் போல பேசும் கிம் இதைக்கண்டு நாட்டுக்கணும். கொள்ளை அடுத்தவனை பக்கத்திலே வச்சுக்கொண்டு மக்களை இம்சிக்கும் கயவனின் சீர்கெட்ட ஆட்சி
கமிஷன் ரோடு என்ற பெயர் பொருத்தமாக இருக்குமப்பா
செய்யூர் : செய்யூர் அருகே தையலங்காடு கிராமத்தில், வில்லிப்பாக்கம் - செய்யூர் செல்லும் தார்சாலை உள்ளது.இச்சாலை மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ஒத்திவிளாகம் ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு, கடப்பாக்கம், மரக்காணம் பகுதியில் கொட்டப்பட்டது.ஏரியில் இருந்து லாரிகள் வாயிலாக, அதிக அளவில் மண் எடுத்துச் செல்லப்பட்டதால், சாலையின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்தன.பின், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளும் நிறுவனம் சார்பாக, கடந்த மே மாதம் சாலை சீரமைக்கப்பட்டது. சாலையை சீரமைத்து நான்கு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், சீரமைக்கப்பட்ட இடங்களில், சாலை மீண்டும் சேதமடைந்துள்ளது.இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏதோ நோபல் பரிசு வாங்கிவந்தவன் போல பேசும் கிம் இதைக்கண்டு நாட்டுக்கணும். கொள்ளை அடுத்தவனை பக்கத்திலே வச்சுக்கொண்டு மக்களை இம்சிக்கும் கயவனின் சீர்கெட்ட ஆட்சி
கமிஷன் ரோடு என்ற பெயர் பொருத்தமாக இருக்குமப்பா