மேலும் செய்திகள்
நுாலகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்
25-Feb-2025
சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சி தெள்ளிமேடு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தனி ஓடு போட்ட கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். இந்த கட்டடம் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, 2019 ல் பழைய அங்கன்வாடி கட்டடம் அமைக்கும் பணிகள் துவங்கியது ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை புதிய அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிகள் நிறைவடையாமல் உள்ளது.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:பழைய அங்கன்வாடி கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் அருகில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தில் பயில்கின்றனர். அங்கு சமையல் செய்ய இடவசதி இல்லாததால் பழைய அங்கன்வாடி கட்டடத்தில் சமையல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டத்தின் மேல்தளத்தில் கான்கிரீட் உதிர்ந்து கீழே விழுவதால் பணிபுரியும் பெண்கள் அச்சதுடன் வேலை பார்க்கும் நிலை உள்ளது. எனவே இந்த புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தின் பணிகளை விரைந்து முடிக்கவும், ஆபத்தான நிலையில் உள்ள பழைய அங்கன்வாடி மையத்தை இடிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
25-Feb-2025