உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆக்கிரமிப்பை அகற்றுவது யார்? முரண்டு பிடிக்கும் அதிகாரிகள்!

ஆக்கிரமிப்பை அகற்றுவது யார்? முரண்டு பிடிக்கும் அதிகாரிகள்!

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், போக்குவரத்திற்கு இன்றியமையாத சாலைகளாக, கிழக்கு ராஜ வீதி, கடற்கரை சாலை, ஐந்து ரதங்கள் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை, பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை ஆகியவை உள்ளன.இச்சாலைகள் குறுகிய அகலமே உள்ளன. இப்பகுதி நிரந்தர கடைகள், சாலை வரை நீண்டும், நடைபாதை கடைகள் ஆக்கிரமித்தும் குறுகியுள்ளன.வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில், சுற்றுலா வாகனங்கள் படையெடுக்கும் நிலையில், குறுகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதுகுறித்து, நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, சப் - கலெக்டர் நாராயணசர்மா, ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டார்.நாளை முதல் 25ம் தேதி வரை, தினசரி ஒரு சாலை பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை மீட்க உத்தரவிட்டார். நாளை ஆக்கிரமிப்புகளை அகற்றவுள்ள நிலையில், அரசுத் துறையினர் முரண்டு பிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, வருவாய் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:நெடுஞ்சாலைத் துறை சாலை ஆக்கிரமிப்புகளை, யார் அகற்றுவது என்பதில், நெடுஞ்சாலைத் துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தினர் இடையே குழப்பம் நீடிக்கிறது. இரு தரப்பினரும் முரண்டு பிடிக்கின்றனர். இரண்டு துறையினரையும் ஒருங்கிணைத்து, நிச்சயம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ