உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொலிரோ கார் மோதி கூடுவாஞ்சேரியில் வாலிபர் பலி

பொலிரோ கார் மோதி கூடுவாஞ்சேரியில் வாலிபர் பலி

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில், நள்ளிரவில் சாலையைக் கடந்த வாலிபர், பொலிரோ கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம், எட்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்துரு, 35. தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:40 மணியளவில், பணி முடித்து கூடுவாஞ்சேரி, மீன் மார்க்கெட் சிக்னல் அருகே சாலையை கடந்தார்.அப்போது, செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற பொலிரோ கார், சந்துரு மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சந்துரு, சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவல் அறிந்த பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடம் வந்து, சந்துரு உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, சந்துரு மீது மோதிய பொலிரோ கார் ஓட்டுனரான, வளசரவாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை